வச்சிட்டாங்க ஆப்பு.. பழசை மொத்தமா கிளறி நடிகை குஷ்பூவை சிக்கவைத்த தொண்டர்கள்..! வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!!
வச்சிட்டாங்க ஆப்பு.. பழசை மொத்தமா கிளறி நடிகை குஷ்பூவை சிக்கவைத்த தொண்டர்கள்..! வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!!
தனது கட்சியில் இருக்கும்போது ஒருவர் தெரிவித்த கருத்துக்கு ஏகபோக வரவேற்பு தெரிவித்தவர்கள், சம்பந்தப்பட்டவர் மற்றொரு கட்சிக்கு சென்றதும் ஆண்டுகள் கடந்த பதிவை தோண்டியெடுத்து வம்பிழுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநில பொதுக்கூட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு பேசுகையில் மோடி சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார்.
இதனால் அவருக்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, இவ்வழக்கின் தீர்ப்பின் மூலமாக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவரின் எம்.பி பதவியும் பறிபோயுள்ள நிலையில், 30 நாட்கள் முன்ஜாமீன் பெற்றுள்ள ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மேல் விசாரணைக்கு மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2018 ல் காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில் லலித், நீரவ் என மோடி பெயரை அடைமொழியாக கொண்டவர்கள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டு இருந்துள்ளார்.
தற்போது பாஜகவில் நடிகை குஷ்பூ இருக்கும் நிலையில், அவருக்கு எதிரான ஆயுதத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சியினர், இப்பதிவை மீண்டும் வைரலாகி குஷ்பூ மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என குரல் உயர்த்தி வருகின்றனர்.