ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை: கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும். இணைவார்களா?
admk - ops - eps joint report
தமிழக முதல்வரும் துணை முதல்வரும் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது தற்சமயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனனில், கடந்த ஒருவாரமாக மீடியாக்களை பிஸியாக்கி தமிழகத்தை பரபரப்பாக வைத்து இருந்தனர் தினகரன் தரப்பினர். தற்பொழுது உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் தீர்ப்பில் தினகரன் தரப்பு ஒருவிதமான ஆட்டம் கண்டுள்ளது எனலாம்.
ஏனெனில் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாதகமாக அமைந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக அறிக்கை விட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்ததை உணர்ந்து, சிலரின் தவறான வழிநடத்தலால் மாற்றுப் பாதையில் சென்றவர்கள் அதிமுகவுக்கு மீண்டும் திரும்ப வேண்டும்.
ஜெயலலிதா, எம்ஜிஆர் உருவாக்கிய மகத்தான இயக்கத்தில் மீண்டும் இணைய வேண்டும். நீர் அடித்து, நீர் விலகுவதில்லை என்பது முப்பெரும் தமிழ் பழமொழி. சிறுசிறு மனகசப்புகள், எண்ண வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இணைய வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கையினை பிரிந்து சென்றவர்கள் ஏற்பார்களா ஏற்கமாட்டார்கள் என்பதை காலம்தான் முடிவு செய்யும்.