#LokSabha2024 | "தமிழகத்தை காப்பாத்த அதிமுக ஜெயிக்கணும்" - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.!!
#LokSabha2024 | தமிழகத்தை காப்பாத்த அதிமுக ஜெயிக்கணும் - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி.!!
2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரை திமுக அதிமுக மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இவை தவிர நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
பல சுயேட்சை வேட்பாளர்களும் பாராளுமன்ற தொகுதியில் களத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பாஜக உடன் கூட்டணி வைத்த அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்து கொண்டது. இதனைத் தொடர்ந்து வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது.