×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"பாஜகவுக்கு நோ ; திமுக தான் மெயின் டார்கெட்.." கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!!

பாஜகவுக்கு நோ ; திமுக தான் மெயின் டார்கெட்.. கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.!!

Advertisement

2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி ஏற்படலாம் என்ற பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்த நிலையில் இனி எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள்  அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, கே.பி.முனுசாமி, தங்கமணி, செம்மலை உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை என தெரிவித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுக எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த அவர் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் பாஜக தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: "துண்டு சீட்டு இல்லாமல் பேசுவாரா ஸ்டாலின்.." முதல்வருக்கு இபிஎஸ் பதிலடி.!!

அதிமுக - பாஜக மோதல்

கடந்த 2023 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியிடையே பிளவு ஏற்பட்டது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை தரக்குறைவாக விமர்சித்து வந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுகவில் விலகி திமுகவில் ஐக்கியம்; மாஸ் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #politics #Admk #bjp #dmk #Ex Minister Jeya Kumar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story