×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#LokSabha2024: "வருகின்ற தேர்தலுக்குப் பிறகு மோடி பிம்பம் தகர்க்கப்படும்"‌ - முதல்வர் ஸ்டாலின் ஆக்ரோஷமான பிரச்சாரம்.!!

#LokSabha2024: வருகின்ற தேர்தலுக்குப் பிறகு மோடி பிம்பம் தகர்க்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் ஆக்ரோஷமான பிரச்சாரம்.!!

Advertisement

இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட பல மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கிறது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் ஆட்சியை அகற்றுவதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக பாடுபட்டு வருகிறது. தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனது பிரச்சாரங்களின் போது பாஜக அரசின் 10 வருட ஆட்சியின் அவலங்களையும் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்பட்ட உரிமைகள் குறித்தும் பேசி வருகிறார் முதல்வர். மேலும் தனது பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தற்போது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் இமேஜோடு சேர்த்து ஆர்எஸ்எஸ் இமேஜும் தவிடு பொடியாக உடையும் என தெரிவித்திருக்கிறார்.

மக்களிடம் மத உணர்வுகளை தூண்டிவிட்டு வெறுப்பு அரசியலை நடைமுறைப்படுத்தும் ஆர்எஸ்எஸ் கருத்தியல் தான் பாஜகவின் கொள்கை எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின் பாஜக ஜனநாயகத்தைப் பற்றி பேசும். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காது என தெரிவித்தார். பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் நிர்வாக சிக்கல்களை சரி செய்வதற்கும் மத்திய அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#politics #Admk #bjp #sellur raju #annamalai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story