×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JustIN: திமுக கூட்டணிக்கட்சிக்கே இந்த நிலைமையா?.. அரசியலை தாண்டி, கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..! விபரம் உள்ளே.!

#JustIN: திமுக கூட்டணிக்கட்சிக்கே இந்த நிலைமையா?.. அரசியலை தாண்டி, கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி..! விபரம் உள்ளே.!

Advertisement

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது, கூட்டணி கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் மீது ரௌடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர் விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. 

அரசியல் ரீதியாக பாஜக-திமுக கடும் சண்டை செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக கூறி வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னை தியாகராஜ நகரில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் மதுபான பாட்டிலை வீசி சென்றனர். நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. 

இந்த விஷயம் குறித்து அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்கூறிய சம்பவத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவரின் எக்ஸ் (டுவிட்டர்) பதிவில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். 

இந்த விடியா திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சி இயக்கங்கள், அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் #இந்தியகம்யுனிஸ்ட்கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.  

நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது, தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #edappadi palanisamy #dmk #AIADMK #politics #எடப்பாடி பழனிச்சாமி #திமுக #அதிமுக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story