×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தற்காலிக கழிவறை கூட இல்லை.. இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள்.. வறுத்தெடுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.! 

தற்காலிக கழிவறை கூட இல்லை.. இலட்சக்கணக்கில் திரண்ட மக்கள்.. வறுத்தெடுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.! 

Advertisement

இன்று நடைபெற்ற விமான கண்காட்சியை காண வந்த மக்கள் அதிக இன்னலை சந்தித்ததாக முன்னாள அமைச்சர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில், 92 வது இந்திய விமானப்படையின் தினத்தை முன்னிட்டு, இன்று மிகப்பெரிய அளவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கு கூடியதால் போக்குவரத்து நெரிசல், இரயில் நிலையங்கள் ஸ்தம்பிப்பு என மக்கள் அவதிப்பட்டாலும், வான் சாகசங்களை கண்டு மகிழ்ந்தனர். சிலர் கூட்ட நெரிசலால் நீரிழப்பை சந்தித்து மயங்கி விழுந்தனர். பிரம்மாண்டமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அரசு, அதற்கான முன்னேற்பாடுகளை சரிவர செய்யவில்லை என மக்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. 

முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்ட ட்விட்டில், "சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர்,உணவு, தற்காலிக கழப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தபடவில்லை.
இரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை.

இதையும் படிங்க: மீண்டும் அதிமுகவில் இணைந்த மைத்ரேயன்; உற்சாகத்தில் கட்சித்தொண்டர்கள்.!

முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன! இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்" என தெரிவித்துள்ளார்.

 
 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#AIADMK #Air Show #jayakumar #MK Stalin #Tn govt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story