கேப்பில் கிடா வெட்டிய ஓ.பி.எஸ்., சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக..! சட்டப்பேரவையில் சம்பவம்.!
கேப்பில் கிடா வெட்டிய ஓ.பி.எஸ்., சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக..! சட்டப்பேரவையில் சம்பவம்.!
சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் பேச வாய்ப்பு அளித்தபோது, அவர் முடிக்கையில் அதிமுகவை இழுத்ததால் அமளி ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடைசட்டம் தீர்மானமாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினால் கொண்டு வரப்பட்டது. இந்த தடைச்சட்டம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்த நிலையில், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் தனது கருத்துக்களை பேசி முடித்தார். பின்னர், சபாநாயகர் ஓ.பன்னீர் செல்வத்தை பேச அனுமதி வழங்கினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
கூச்சலின்போது பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "உறுப்பினர் என்ற முறையில் மட்டுமே அவரை (ஓ.பன்னீர் செல்வம்) பேச அனுமதித்தேன். தவிர அக்கட்சிக்குள் (அதிமுக) குழப்பத்தை ஏற்படுத்த நான் முயற்சிக்கவில்லை. சட்ட முன்வடிவு குறித்து கட்சிக்கு ஒருவர் பேசலாம் என நான் கூறவில்லை. அவையில் அவர் மூத்தவர், முன்னாள் முதல்வர் என்ற முறையில் பேச அனுமதி வழங்கினேன்" என கூறினார்.
இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அதிமுகவினர், ஓ.பி.எஸ் அதிமுக சார்பில் ஆதரிக்கிறேன் என கூறி முடுக்கிறார். அவரை எதற்காக பேச அனுமதி வழங்கினீர்கள்?. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை எப்படி பேச அனுமதி வழங்க முடியும். இது குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே நான் கருதுகிறேன். ஓ.பன்னீர் செல்வத்தை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்" என பேசினார்.