கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.!
கடன்கார, குடிகார மாநிலமாக தமிழ்நாடு - அண்ணாமலை பேச்சு.!
மாநிலத்தை குடிகார, கடன்கார மாநிலமாக மாற்றியதே திமுக அரசின் விடியல் என அண்ணாமலை பேசினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலையில், நேற்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் 2026 தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மக்கள் முடிவு செய்யட்டும்
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தை கடன்கார மாநிலமாக, குடிகார மாநிலமாக மாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வீட்டிற்கு செல்ல வேண்டுமா? வேண்டாமா? என மக்கள் முடிவு செய்யுங்கள்.
இதையும் படிங்க: நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனி - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!
2026ல் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும். மக்களிடம் அந்த மாற்றத்தை கொண்டு வ்ருவதே நமது வேலை. 1 கோடி தொண்டர்களை நாம் இணைத்துவிட்டால், 2026ல் நமது ஆட்சி நிச்சயம்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: விசிக முன்னாள் மா.செ கைது., ஆரணியில் பதற்றம்.!!