#Breaking: சீமானுக்கு ஆதரவு: "நான் தரேன் ஆதாரம்" அண்ணாமலை பாய்ச்சல்.!
#Breaking: சீமானுக்கு ஆதரவு: நான் தரேன் ஆதாரம் அண்ணாமலை பாய்ச்சல்.!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு எதிரான வாதத்தை நேற்றில் இருந்து கடுமையாக முன்வைத்து இருக்கிறார். இதனால் நாதக Vs பெரியார் ஆதரவாளர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சீமானின் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
மேலூர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி
கோவை மாவட்ட விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, "முதல்வர் தற்போதாவது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அரசியல் செய்யக்கூடாது. மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் பிரச்சனைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதையும் படிங்க: "பாலியல் வன்கொடுமை எல்லா ஊர்களிலும் நடைபெறுகிறது" - அமைச்சர் துரைமுருகன் பேச்சு.!
பெரியார் விவகாரம்
பெரியார் ஒரு காலத்தில் பேசியதை, தற்போது பேசினால் மக்கள் அருவெறுப்பு அடைவார்கள். பெரியார் பேசியதை பொதுவெளியில் பேசினால் நாகரீகமாக இருக்காது. சீமானுக்கு பெரியார் விஷயத்தில் நான் ஆதரவு கொடுக்கிறேன். இதனை பற்றி பொதுவெளியில் பேச நான் விரும்பவில்லை.
அவர் பேசியதை தற்போது பேசினால் அருவெறுப்புத்தன்மையே மிஞ்சும். ஆதாரத்தை நான் தரத் தயார். நான் அதனை பேச விரும்பவில்லை. மக்கள் புதிய அரசியலை விரும்புகிறார்கள். அதனால் நான் ஆதாரத்தை மட்டும் தருகிறேன்" என பேசினார்.
இதையும் படிங்க: அனுதாபிக்கும் - அமைச்சருக்கும் தொடர்பு என்ன? அருகதை இல்லை உங்களுக்கு - வானதி ஸ்ரீனிவாசன் ஆவேசம்.!