ஆருத்ரா கோல்ட் ரூ.2,348 கோடி மோசடி விவகாரம்; முன்னாள் பாஜக பிரமுகரை வறுத்தெடுக்கும் காயத்ரி ரகுராம்.! என்ன சொன்னார் தெரியுமா?.!
ஆருத்ரா கோல்ட் ரூ.2,348 கோடி மோசடி விவகாரம்; முன்னாள் பாஜக பிரமுகரை வறுத்தெடுக்கும் காயத்ரி ரகுராம்.! என்ன சொன்னார் தெரியுமா?.!
தமிழகத்தையே அதிரவைத்துள்ள ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி விவகாரத்தில் நடிகை பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
சென்னையில் ஆருத்ரா கோல்ட் நிறுவனம் அதிக வட்டி தருகிறோம் என்று கூறி இலட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,348 கோடி வசூல் செய்து மெகா மோசடியில் ஈடுபட்ட நிலையில், 21 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல சோதனைகள் நடந்தன.
முதற்கட்டமாக நிறுவனத்தின் இயக்குனர்களான பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜ், மேலாளர்கள் பேச்சிமுத்து ராஜா, ஐயப்பன், சந்திரசேகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ராஜசேகர், மைக்கேல், உஷா ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதால், அவர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ரூ.5.69 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வங்கிக்கணக்கில் இருந்த ரூ.96 கோடி பணம் ஆகியவை முடக்கப்பட்டன. நிறுவனத்தின் பணியாளர்கள் சொத்துக்கள் கண்டறியப்படும் பணி நடைபெறுகிறது. சமீபத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான தலைமறைவாக இருந்த ஹரிஷ், மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஆருத்ரா குற்ற வழக்கில் 4ம் குற்றவாளியாக இருக்கும் ஹரிஷ், பாரதிய ஜனதா கட்சியில் விளையாட்டு, திறன் மேம்பாட்டு துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாநில செயலாளர் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் குற்றவழக்கில் கைதாகிய பின்னர் ஹரிஷ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்
இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.210 கோடி வசூல் செய்து மோசடியில் எடுப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு சொந்தமான வாங்கிக்கணக்குகள், சொத்துக்களை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
நடிகை காயத்ரி ரகுராமின் ட்விட்டரில், "ஆருத்ரா நிதி நிறுவன மேலாண்மை இயக்குனர் ஹரிஷ் திரு அமர பிரசாத் ரெட்டி வெளியிட்ட அறிக்கையின் படி பார்த்தால் இடை நீக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளார். திரு ஹரிஷ் அவர்களின் வழக்கறிஞர் திரு அமரப்பிரசாத் ரெட்டியை தொடர்பு கொண்டு பேசி உள்ளதாக கூறியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது காவல்துறையால் விசாரிக்கப்பட வேண்டும்.
கட்சி பொறுப்புக்கு மட்டும் இடைநீக்கம் என்பது கட்சி விதியின் கீழ் செல்லாது. உறுப்பினர் இடை நீக்கம் என்பது மாநிலத் தலைவர் மட்டுமே செய்ய இயலும். கட்சியின் ஒரு உறுப்பினரை இடைநீக்கம் மற்றும் நீக்கம் என்பது மாநில தலைவரால் செய்யப்படவில்லை என்றால் அந்த நீக்கம் செல்லாது.
ஒரு அடிப்படை உறுப்பினர் நீக்கப்படுகிறார் என்றால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் குற்றங்கள் எடுத்துச் செல்லப்பட்டு மாநில அமைப்பு செயலாளரால் பிறகு மீண்டும் மாநில தலைவருக்கு பரிந்துரைக்கப் பட்டு நீக்கம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டவர் அனுமதியை செயற்குழுவில் பெற வேண்டும் எதுவுமே திரு ஹரிஷ் விஷயத்தில் நடைபெறவில்லை.
திரு அமர பிரசாத் ரெட்டி மரியாதைக்கு கூட இடை நீக்கம் செய்யப்பட்ட தகவல்களை மாநில தலைவருக்கும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் நகல் அனுப்பப்படவில்லை. இதுபோன்று கட்சி விரோதியின் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமர பிரசாத் ரெடி நீக்க வேண்டும் என்று கட்சிக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது" என தெரிவித்துள்ளார்.