தொடங்கியது புதிய ட்ரெண்ட்! திருமணப் பத்திரிகை மூலம் ஓட்டு சேகரிப்பு
asking vote for modi in marriage invitaion
நாடாளுமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளதால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சிகளை வலுப்படுத்துவதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த வகையில் மக்களை கவரலாம் என்பதைப் பற்றியும் ஆழமாக யோசித்து வருகின்றனர்.
கட்சித் தலைவர்கள் மட்டும் பாடுபட்டால் போதாது ஒரு தொண்டர்களும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்பதை நாட்டில் நடக்கும் சில பாஜகவினர். மோடி மீது அவர்கள் கொண்ட கொண்டுள்ள பற்றினை அவர்களது இல்ல திருமண அழைப்பிதழில் காண்பித்துள்ளனர்.
பொதுவாக திருமண அழைப்பிதழ்களில் எங்களுக்கு பரிசுகள் எதுவும் வழங்க வேண்டாம் என சிலர் குறிப்பிடுவார்கள். ஆனால் சூரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தின் அழைப்பிதழில் மணமக்களின் பெற்றோர் அழைப்பதன் மூலம் மோடிக்கு வாக்கு சேகரிக்கின்றனர். "திருமண அன்பளிப்பாக 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மோடிக்கு வாக்களியுங்கள்" என அவர்கள் அந்த அழைப்பிதழில் அச்சிட்டுள்ளனர்.
சூரத்தில் மட்டுமல்லாது மங்களூரில் நடைபெற்ற மற்றொரு திருமண அழைப்பிதழில் அதேபோல் அச்சிடப்பட்டுள்ளது. சிலர் தங்களது திருமண அழைப்பிதழ்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் மோடி அறிமுகம் செய்த திட்டங்களைப் பற்றி விளக்கும் விதமாக அச்சிட்டுள்ளனர். பாஜகவினரின் இந்த புதிய முயற்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.