தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர் - அண்ணாமலை புகழாரம்.!

தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர் - அண்ணாமலை புகழாரம்.!

bjp-annamalai-on-mgr-birthday Advertisement

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர் என அண்ணாமலை பேசினார்.

 

மறைந்த தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரனின் பிறந்தநாள் 17 ஜனவரி 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அஇஅதிமுக தொண்டர்கள் பலரும், தங்களின் ஊர்களில் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழக முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா அமரர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்த தினம் இன்று.

இதையும் படிங்க: அனுதாபிக்கும் - அமைச்சருக்கும் தொடர்பு என்ன? அருகதை இல்லை உங்களுக்கு - வானதி ஸ்ரீனிவாசன் ஆவேசம்.!

தலைசிறந்த தேசியவாதி

விளிம்புநிலை மக்களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர். சுகாதாரம், தொழில் பயிற்சி திட்டங்கள், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள், கல்வி உட்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு, பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு என ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் மேம்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி, தமிழைப் பெருமைப்படுத்தியவர்.

சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதியான டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்" என தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: தேசிய கீதம் பாடுவதில் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? - பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bjp #annamalai #MGR #அரசியல் #அண்ணாமலை #எம்ஜிஆர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story