"கூட்டணி ஆட்சிதான்.. ஆனால் கூட்டணி இல்லை." குழப்பி அடித்து பேசிய அண்ணாமலை.!
கூட்டணி ஆட்சிதான்.. ஆனால் கூட்டணி இல்லை. குழப்பி அடித்து பேசிய அண்ணாமலை.!
விஜய்க்கு வாழ்த்து
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அண்ணாமலை, "விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு நபர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பதில் ஆச்சரியம் இல்லை. அரசியலுக்கு வந்த பின் அவர் நிறைய துரோகங்களையும், ஏற்ற, இறக்கங்களையும் சந்திப்பார்.
5 முனை போட்டி
ஜெயலலிதா, கருணாநிதி போல ஒரு நீண்ட அரசியல் பயணத்தை அவர் மேற்கொள்ளட்டும். ஒரே தேர்தலில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக, த வெ க மற்றும் நாம் தமிழர் என்று 5 முனை போட்டி நிலவுகின்றது. வெவ்வேறு அரசியலை ஒவ்வொரு கட்சியும் முன்னெடுக்கிறது.
இதையும் படிங்க: #Breaking: "இறுமாப்போடு கூறுகிறேன்" - விஜய்க்கு எதிராக கனிமொழி எம்.பி பாய்ச்சல்.!
பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி என்பது ஆசை
ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நமது நயினார் நாகேந்திரன் ஆசைப்படுகிறார். 2026 இல் தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அது கூட்டணி ஆட்சியாக தான் இருக்கும். களம் மாறிவிட்டது. பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
தவெக & அதிமுகவுடன் கூட்டணி இல்லை
ஆனால், தற்போதைய சூழலில் கூட்டணி என்பது சாத்தியமில்லாதது. 2026 இல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவானது த வெ க மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காது." என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மக்கள நெனச்சா வேதனையா இருக்கு: திமுக கனவு பலிக்காது.." செல்லூர் ராஜு பேட்டி.!!