குடும்பமாக இந்து மதத்தை விமர்சித்தாரா கமல்?.. எச்.ராஜா பரபரப்பு ட்விட்..! உண்மையை ஒப்புக்கொண்ட கமல்ஹாசன்.!!
குடும்பமாக இந்து மதத்தை விமர்சித்தாரா கமல்?.. எச்.ராஜா பரபரப்பு ட்விட்..! உண்மையை ஒப்புக்கொண்ட கமல்ஹாசன்.!!
இந்து மதம் என்பது சோழர்களின் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமண மதங்களே இருந்தது என்று பேசிய கமல், நண்பரிடம் இந்து மதத்தை ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனை எச்.ராஜா விமர்சித்து இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில், சியான் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்தீபன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், திரிஷா மற்றும் கார்த்திக் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வைத்து சோழர்களின் வரலாறுகளை படமாக எடுத்துள்ளனர்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன் இந்து மதத்தை திணித்து நமது அடையாளத்தை கைப்பற்றுகிறார்கள் என்று பேசியிருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே நடிகர் கமல் ஹாசன் மற்றும் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கமல் ஹாசன், "இந்து மதம் என்பது சோழர்களின் காலத்தில் இல்லை. சைவம், வைணவம், சமணம் போன்ற மதங்களே இருந்தது. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்" என்று பேசினார்.
இதற்கும் பாஜக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. மேலும், இந்து மதம் ஆங்கிலேயர்கள் வைத்த பெயர் என்றால், இத்துணை காலம் ஜாதிய ஏற்றத்தாழ்வுக்கு இந்து மதமே காரணம் என்று கூறி அனைவரையும் விமர்சித்தது எதனால்? என்று நெத்தியடியாக கேள்விக்கணைகளை பாஜக உயர்த்தி இருந்தது.
இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க, அவரவருக்கு தெரிந்த பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். நிலைமை இப்படியிருக்க கமல் ஹாசன் தனது நண்பரான எழுத்தாளர் பி.ஏ கிருஷ்ணனிடம் இந்து மதம் இருப்பதை நான் மறுக்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக எச்.ராஜா ட்விட் பதிவு செய்துள்ளார்.
அதில், "கமலஹாசன் எதுபற்றியும் ஆழமாக படிக்காமல் உளரும் பழக்கமுள்ளவர். ஆனால் நான் காசுக்காக பைபிள் விற்றேன் என்று கரன் தாப்பரிடம் இவர் கூறியதையோ, இவருடைய சகோதரர் சந்திரஹாசள் கிறித்தவ முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டதையோ, சாருஹாசன் தொடர்ந்து இந்து விரோதமாக பேசிவருவதையோ மறுக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். இவரின் ட்விட் பதிவு வாயிலாக கமலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்து மதத்தை விமர்சனம் செய்து வருகிறார்களோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.