#Loksabha | "என்ன நடந்தாலும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்..." தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி.!!
#Loksabha | என்ன நடந்தாலும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்... தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் உறுதி.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற பொது தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 26 ஆம் தேதி கேரளா கர்நாடகா உட்பட மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.
கொல்கத்தா உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளுக்கு அனைத்து கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் அந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.