முழுநேர மதுபோதை.. விசிக பிரமுகர் நாக்கு வறண்டு மர்ம சாவா?.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!
முழுநேர மதுபோதை.. விசிக பிரமுகர் நாக்கு வறண்டு மர்ம சாவா?.. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்.!
குடும்பத்தை பிரிந்து கடன் வாங்கி மதுபானம் அருந்திவந்த வி.சி.க பிரமுகர், தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். குடி குடியை கெடுக்கும் என்பதற்கு உதாரணமாக நடந்துள்ள சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள எண்ணூர், சின்ன எர்ணாவூரில் வசித்து வருபவர் தனசேகர் (வயது 48). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவெற்றியூர் தொகுதி துணை செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். தனசேகரின் மனைவி தீபா (வயது 40). தம்பதிகளுக்கு மகன் இருக்கிறார்.
தனசேகர் - தீபா தம்பதிகள் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, தனசேகர் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறார். தீபா தனது மகன் ப்ரவீனோடு திருவெற்றியூர் தாங்களில் உள்ள தாயின் வீட்டில் வசித்து வருகிறார். மதுபோதைக்கு அடிமையான தனசேகர், தினமும் மதுபானம் அருந்துவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாகவே தனசேகரின் வீடு பூட்டி கிடைக்கவே, நேற்று காலை நேரத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. தனசேகருக்கு கடன் கொடுத்த 2 பேர் கடனை வாங்கவந்தபோது, துர்நாற்றத்தை உணர்ந்து எண்ணூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அழுகிய நிலையில் இருந்த தனசேகரின் உடலை மீட்டனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். தலையில் காயம் இஇருந்துள்ளது. இதனால் அவரை யாரேனும் மர்ம நபர்கள் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் தனசேகர் பலரிடம் கடன் வாங்கி மதுபானம் அருந்தும் வழக்கத்தை வைத்துள்ளார். எப்போதும் போதையிலேயே இருக்கும் தனசேகர், சம்பவத்தன்று மிதமிஞ்சிய போதையில் நாக்கு வறண்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்துகின்றனர்.