×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதலமைச்சர் நியாயமாக நடக்காவிட்டால் கவர்னரிடம் சென்று தீர்வு காண்போம்.. அண்ணாமலை அதிரடி..!

முதலமைச்சர் நியாயமாக நடக்காவிட்டால் கவர்னரிடம் சென்று தீர்வு காண்போம்.. அண்ணாமலை அதிரடி.!

Advertisement

முதலமைச்சர் நியாயமாக நடக்கவில்லை என்றால் கவர்னரிடம் சென்று தீர்வு காண்போம் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்தில், முதலஅமைச்சர் நியாயமாக நடக்கவில்லை என்றும், இங்குள்ள மக்களை கவர்னரிடம் அழைத்து சென்று தீர்வு காண்போம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரில் உள்ள வீடுகளை அகற்றும் சம்பவத்தில், கண்ணையன் என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்தினரை பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

1971 ஆம் ஆண்டு முதலாக அரசாங்கத்தின் குடிசை மாற்று வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடமாக ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் உள்ளது. ஒரு தனிப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு பாதை வேண்டும் என்பதற்காக இந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

இப்போது அவசரம், அவசரமாக இந்த இடத்தில் உள்ள வீடுகளை இடித்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களை  சென்னைக்குள் அகதிகளாக மாநில அரசு மாற்றிவிட்டு, நாங்கள் திராவிட மாடல் அரசு என்று சொல்கிறார்கள். இதை பார்த்து மக்கள் சிரிக்கதான் செய்வார்கள்.

கண்ணையன் இறந்தபோது, என்னிடம் கொடுக்க சொல்லி ஒரு வீடியோ கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். ஊமை மக்களாக எங்களை நினைத்து இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு செய்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு மனித உரிமை விதிமீறல்கள் நடந்துள்ளன. பா.ஜ.க வினர் இங்குள்ள மக்களை கவர்னரிடம் அழைத்து சென்று தீர்வு காண்போம். ஏனென்றால், முதலமைச்சர் இந்த விஷயத்தில் நியாயமாக நடக்கவில்லை.

எனவே கவர்னர் மூலமாக தலைமை செயலாளரிடம் விளக்கம் கேட்டு, இனியும் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதற்கும், இடித்த வீடுகளை மீண்டும் கட்டித்தருவதற்கும் உதவி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#K Annamalai #bjp #TN BJP #m.k.stalin #TN Governor #R.A.Puram Housing Board Issue
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story