#LokSabha: "பாஜக ஆட்சியில் சீனாவால் ஒரு இன்ச் நிலத்தை கூட அபகரிக்க முடியவில்லை.." உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி.!!
#LokSabha: பாஜக ஆட்சியில் சீனாவால் ஒரு இன்ச் நிலத்தை கூட அபகரிக்க முடியவில்லை.. உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்குப்பதிவு நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள அசாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.