தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: நாவடக்கம் தேவை.. நீங்கள் மன்னனா? - மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் சரமாரி கண்டனம்.!

#Breaking: நாவடக்கம் தேவை.. நீங்கள் மன்னனா? - மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் சரமாரி கண்டனம்.!

cm-mk-stalin-anger-with-dharmendra-pradhan Advertisement

தமிழக எம்.பிக்கள் நாகரீகம் இல்லாதவர்களா? உங்களுக்கு நாவடக்கம் தேவை என முதல்வர் காட்டமான பதில் தெரிவித்துள்ளார். 

 

மக்களவை கூட்டத்தொடரில், இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கை விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி நேரத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பி.எம் ஸ்ரீ கல்வி திட்டம் விவகாரத்தில், மத்திய அரசின் திட்டத்தை நிராகரிக்கும் சூப்பர் முதல்வர் தமிழ்நாட்டில் யார்? என மத்திய மைச்சார் கேள்வி எழுப்பினார். ஒருசில சர்ச்சைக்குரிய வார்த்தையையும் மத்திய அமைச்சர் பயன்படுத்திய நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது கண்டனத்தை தெரிவித்ததையடுத்து, மத்திய அமைச்சர் அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இதையும் படிங்க: #Breaking: நீ நாசமா போவ, என் கண்ணீர் உன்னை சும்மா விடாது - நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு குமுறல்.!

நாவடக்கம் தேவை

இந்நிலையில், இந்த விசயத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? 

new education policy

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

வற்புறுத்த முடியாது

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.

தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: திருமாவளவனும் இப்படியா? ஹிந்தி திணிப்பு விஷயத்தில் இரட்டை வேடம்? அண்ணாமலை குற்றச்சாட்டு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#new education policy #tamilnadu #bjp #dmk #MK Stalin #முக ஸ்டாலின் #கல்விக்கொள்கை #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story