திருவாரூர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா போட்டியா? விரைவில் அறிவிப்பு!
Deepa in thiruvaarur by election
தமிழகத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் முதலர்வர் கருணாநிதியின் தொகுதி என்பதால் பல்வேறு கட்சிகளும் தன் வசம் அந்த தொகுதியை இழுக்க முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை திமுக தனது வேட்பாளரை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.