×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

LOK SABHA | மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதில் தாமதமா.? வெளியான புதிய தகவல்.!

LOK SABHA | மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதில் தாமதமா.? வெளியான புதிய தகவல்.!

Advertisement

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற 17 வது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்ற இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றியது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் வருகின்ற மே மாதத்துடன் முடிவடைவதை தொடர்ந்து மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த பொது தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் ஆரம்பமாவதாக கருதி பணிகளை தொடங்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களுக்குள் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிரமான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவலின் படி மார்ச் 13ஆம் தேதிக்கு பிறகு மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ  தேதிகள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பொது தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுகள் முடிந்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வருகின்ற மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வுகளை முடித்து டெல்லி திரும்பிய பிறகு பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடம் பொதுத்தேர்தலுக்கான தேதிகள் மார்ச் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#politics #Lok Sabha Election 2024 #election commission #date announcement #General Election
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story