போட்டி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்ட தேமுதிக! உற்சாகத்தில் தொண்டர்கள்.!
dmdk announces candidate name list
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது கூட்டணி மற்றும் வேட்பாளர் குறித்த பாட்டிலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவும் தங்கள் தொகுதிகள் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக.,விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தேமுதிக தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி திருச்சி - டாக்டர். இளங்கோவன்
கள்ளக்குறிச்சி - எல்.கே சுதீஷ்
விருதுநகர் - அழகர்சாமி போட்டி
வடசென்னை - அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.