இவர்தான் அந்த சார்.. வீதி வீதியாக போஸ்டருடன் களமிறங்கிய திமுக நிர்வாகி.!
இவர்தான் அந்த சார்.. வீதி வீதியாக போஸ்டருடன் களமிறங்கிய திமுக நிர்வாகி.!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார விவகாரம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வையை கிளப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை பேசுபொருளாக்கி இருந்தன. மேலும், அவையில் விவாதமும் நடைபெறுகிறது. அதிமுக சார்பில் மாணவி எப்.ஐ.ஆர் புகாரில் தெரிவித்த யார் அந்த சார்? என்று விசாரணை நடந்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அதிமுக நிர்வாகி கைது
சட்டப்பேரவைக்கு வரும்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் யார் அந்த சார்? என பேட்ச் அணிந்து வந்திருந்தனர். இதனிடையே, நேற்று அதிமுக நிர்வாகி சுதாகர் என்பவர், அண்ணாநகரில் 10 வயது சிறுமி பலாத்காரம் விவகாரத்தில், காவல் ஆய்வாளர் ராஜி துணையுடன் போலியான குற்றவாளியை பாலியல் வழக்கில் பதிவு செய்து கைது செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சுதாகர், ராஜு கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு; சட்டப்பேரவைக்கு வருகை தரவில்லை..!
யார் அந்த சார்?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அதிமுக - திமுக இடையே யார் அந்த சார்? என்ற விவகாரத்தில் காரசார வாக்குவாத அரசியல் நடந்து வருகிறது. இதனிடையே, இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுக யார் அந்த சார்? என கேள்வி எழுப்பியதற்கு, திமுக நிர்வாகி ஒருவர், அண்ணா நகர் சிறுமி பலாத்கார விவகாரத்தில், குற்றவாளிக்கு துணைபுரிந்த அதிமுக நிர்வாகி சுதாகரை இவன்தான் அந்த சார் என போஸ்டர் அடித்து வழங்கி வருகிறார்.
இவர்தான் அந்த சார்?
இந்த புகைப்படத்தை வீதி-வீதியாக அவர் வழங்கி வருகிறார். இதுதொடர்பான விபரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில், அதிமுக நிர்வாகி சுதாகர், எடப்பாடி பழனிசாமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பயன்படுத்தி போஸ்டர் வழங்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், மாணவி வழங்கிய புகாரின் பேரில் யார் அந்த சார்? என கேள்வி எழுப்பிய நிலையில், அண்ணா நகர் விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளியை இவன்தான் அந்த சார் என திமுக நிர்வாகி கூறுகிறார்.
திமுக-அதிமுக இடையேயான அரசியல் யுத்தத்தில் நடந்து வரும் விவாதங்கள், சர்ச்சை செயல்கள் மக்களின் கவனத்தை பெற்றாலும், அரசியலுக்கு வேறு விஷயமே கிடைக்கவில்லையா? என கேள்வியும் எழுகிறது.
இதையும் படிங்க: "தப்பு இருக்குது, பயம் இருக்குது" - எடப்பாடி பழனிச்சாமி பாய்ச்சல்.!