Video: சரக்கு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது ஏன்?; கேள்வி கேட்ட குடிமகனை வெளுத்தெடுத்த காவலர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
சரக்கு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவது ஏன்?; கேள்வி கேட்ட குடிமகனை வெளுத்தெடுத்த காவலர்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவகைகளுக்கு கூடுதலாக ரூ.10 வசூல் செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.
ஆனால், அரசு இதுகுறித்த குற்றச்சாட்டை இன்று வரை ஏற்க மறுக்கிறது. இதனால் அவ்வப்போது களங்களில் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் வடிக்கையாளரான குடிமகன் இடையே வாக்குவாதமும் நடந்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக்கில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக ரூ.10 பணம் வாங்குவது ஏன் என குடிமகன் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர், குடிமகனை கன்னம் பழுக்க பளார் விட்டு அங்கிருந்து விரட்டி அனுப்பினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
காவல்துறை அதிகாரி குடிமகனை தாக்கியதற்கு ஒருபுறம் கண்டனம் எழுந்தாலும், மதுபானம் குடிப்பதும், விற்பனை செய்வதுமே நியாயப்படி தவறு. இதில் யாரை குறை சொல்வது? என சிலர் புலம்பி வருகின்றனர்.