"பட்டப் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை.." நீட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு.!!
பட்டப் படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை.. நீட் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு.!!
நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியிருக்கும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல அரசியல் கட்சி தலைவர்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீட் தேர்விற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். திமுக கட்சியைச் சார்ந்தவர்கள் நீட் தேர்விற்கி எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சு
நீட் தேர்விற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர்.எஸ் பாரதி தான் படிக்கும் காலத்தில் பி.ஏ படிப்பு மிக உயர்ந்ததாக இருந்தது என தெரிவித்திருக்கிறார். அந்தக் காலத்தில் பிஏ படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய காலத்தில் பிஏ பட்டம் நாயிடம் கூட இருக்கிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும் பட்டப்படிப்புகள் எல்லாம் திராவிட கட்சிகள் போட்ட பிச்சை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் பாஜக... 'களை' எடுக்கப்படும் முக்கிய தலைகள்.!! அண்ணாமலை அதிரடி.!!
குலப்பெருமையால் பட்டப்படிப்புகள் வரவில்லை
மேலும் தொடர்ந்து பேசிய பாரதி மனதில் பட்டதை பேசும் தைரியம் தனக்கு இருப்பதாக தெரிவித்தார். அதனால் தன்னுடைய கருத்துக்களை தைரியமாக எடுத்து வைப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஜாதி வாரி ஒதுக்கீட்டினால் தான் தங்கள் சமூகத்தில் பலரும் மருத்துவர்களாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் குலப்பெருமைகளால் எந்த பட்ட படிப்பும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #BigBreaking: கள்ளக்குறிச்சி விஷசாராய மரண விவகாரம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000/-, கல்விச்செலவு ஏற்பு - அதிமுக அறிவிப்பு.!