எதிர்கட்சி தலைவர் யார் ? நீண்ட வாதங்களுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவு! அதிமுக வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டா
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பின் 65 இடங்களில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாகும் அந்தஸ்தை பெற்றது. ஆனால் அதிமுக சார்பில் எதிர்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இதுகுறித்து முடிவெடுக்க கடந்த 7 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே பெரும் வாக்குவாதம் எழுந்தது. அதனால் எதிர்க்கட்சி தலைவர் யார் என முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் மீண்டும் நடைபெற்றுள்ளது. அங்கு நீண்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.