திமுக எம்பிகளுக்கு ஆர்டர் போட்ட எடப்பாடி பழனிச்சாமி..! விழி பிதுங்கிய ஸ்டாலின்..!
திமுக எம்பிகளுக்கு ஆர்டர் போட்ட எடப்பாடி பழனிச்சாமி..! விழி பிதுங்கிய ஸ்டாலின்..!
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசு இரட்டை வேடம் இடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரும், எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கடந்த 20 ஆம் தேதி அன்று எழுதிய கடிதம் கண்டு தனக்கு அதிர்ச்சியாக உள்ளது என்றும், அந்த கடிதத்தில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான திட்டத்தை விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும், மேலும் மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டு அரசு இரட்டை வேடம் போடுகிறது வேண்டும், தமிழ்நாட்டில் தொடங்கவிருக்கும் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், மேலும், அந்த திட்டங்களை நியாயப்படுத்தி பேசும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்க முடியாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் தான் உள்ளது என்று குற்றம் சாட்டி பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதனை தொடர்ந்து, கடந்த 30.6.2023 தேதி அன்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக செய்திகள் வெளியானது.
இதனை கண்டிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக மாநில துணை முதலமைச்சருக்கு, தனது பெயரில் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டின் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளை சேர்ந்த மொத்தம் எம்பிகளும் உடனடியாக டெல்லிக்கு சென்று, கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டு அதற்கான முயற்சிகளை முறியடிக்க வேண்டும். என்று அவர் கூறியுள்ளார்.