பரபரப்பு... ஆளுநரை சந்தித்த இபிஎஸ்.!! முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்.!!
பரபரப்பு... ஆளுநரை சந்தித்த இபிஎஸ்.!! முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்.!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த விஷச்சாராய மரணங்கள் தமிழகத்தில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஜூன் 18ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தக் கள்ளச்சாராயத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளது.
ஆளுநரை சந்தித்த இபிஎஸ்
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களுடன் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பாஜக கள்ள சாராயம் விற்றதா.? திமுக-வின் ஆர்.எஸ் பாரதி பேட்டியால் சர்ச்சை.!!
முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்
ஆளுநரை சந்தித்த பின் பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் தமிழக உளவுத்துறை தோல்வியடைந்ததாக சுட்டிக்காட்டிய அவர் கள்ளச்சாராயத்துடன் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக பாஜக கள்ள சாராயம் விற்றதா.? திமுக-வின் ஆர்.எஸ் பாரதி பேட்டியால் சர்ச்சை.!!