×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வக்பு சட்டத்திருத்தம் - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!

#Breaking: முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வக்பு சட்டத்திருத்தம் - எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்.!

Advertisement

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது. சுமார் 40 சரத்துகளில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, புதிய வக்பு வாரிய சட்டங்கள் அமல்படுத்தப்படும் வகையில், இன்று நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தமானது தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இந்த விசயத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பு கருத்துக்கள் நிலவி வருகின்றன. 

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அறிவிப்பின் வாயிலாக திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வக்பு சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது. 

முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல. 

வக்பு சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wakf Amendment Act #Edappadi Palanisamy Statement #Central Government #மத்திய அரசு #வக்பு சட்டத்திருத்தம் #எடப்பாடி பழனிச்சாமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story