#JustIN: சட்டவிரோத செயலுக்கு உடந்தை? - அதிமுக, பாஜக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!
#JustIN: சட்டவிரோத செயலுக்கு உடந்தை? - அதிமுக, பாஜக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் முருகானந்தம். இன்று முருகானந்தம், அவரின் சகோதரர் பழனிவேல், நண்பர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை அதிரடியாக நடைபெற்று வருகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத செயல்
கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்.இ.டி மின்விளக்கு விநியோகம் செய்ததில், சட்டவிரோதமான பணப்பரிமாற்றத்திற்கு முருகானந்தம் உடந்தையாக இருந்ததாக தெரியவந்த நிலையில், இதுதொடர்பாக இலஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் பேரில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு? வெளியான தகவல்.!
இதன்பேரில், இன்று முருகானந்தம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 5 இடங்களில், அதிகாரிகள் குழுவினர் பிரிந்து அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "பழைய உறவு விட்டு போகுமா.." பாஜக முக்கிய புள்ளியுடன் நெருக்கம் காட்டிய வேலுமணி.!! அதிமுக கோட்டையில் விரிசலா.?