×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

T20 உலக கோப்பையில் விளையாடாதா ஜடேஜா..! ஆனால் ஜடேஜாவின் மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!

T20 உலக கோப்பையில் விளையாடாதா ஜடேஜா..! ஆனால் ஜடேஜாவின் மனைவிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!

Advertisement

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தோ்தல் நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இத்தோ்தல் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் தொடா்ந்து 7-ஆவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்கவைக்கும் முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜாவின் மனைவி குஜராத் சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ- க்கு போட்டி போடுகிறார். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட ஜடேஜா மனைவி ரிவாபாவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், ஜடேஜாவின் மனைவி ரிவாபா குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியில் சீட்  கிடைக்கும் என பல பேர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அதிர்ஷ்டம் ஜடேஜாவின் மனைவிக்கு அடித்துள்ளது. 

பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலிலேயே ரிவாபாவின் பெயரும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ரிவாபா அப்பகுதியில் உள்ள கிராமங்களில் கவனம் செலுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jadeja wife #MLA Election #bjp
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story