×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ‘கண்ணியம்’ திட்டம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ‘கண்ணியம்’ திட்டம்… சென்னை மாநகராட்சி அறிவிப்பு!....

Advertisement

மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  பள்ளிகளில் ‘கண்ணியம்’ திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக கட்டமைக்கும் முயற்சியில்  நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் உள்ள பள்ளிகளில் சி.சி.டி.வி கேமரா அமைத்தல், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கழிவறைகளை அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்தார். இதன்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

’கண்ணியம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திட்டப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உள்ள 159 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி 25,474 மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படவுள்ளது.

முதல் திட்டத்தில் ஒரு மாணவிக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் நாப்கின் வழங்கப்படவுள்ளது. 2வது திட்டத்தின் படி இந்த பள்ளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 5 பாக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது. 3வது திட்டத்தில் இதை பாதுகாப்பாக அப்புறபடுத்துவதற்கான பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படவுள்ளது. 4வது திட்டத்தில் 159 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

குறிப்பாக வளர் இளம் பருவ காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக வகுப்புகள், இந்த நேரங்களில் சுகாதார வசதிகளை எந்த முறையில் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தபடவுள்ளது

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை பள்ளிகளில் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்டர் பிளான் ஒன்றையும் தயார் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Metropolitan #chennai schools #Kanniyam Plan #Chennai Mayor
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story