கவிழ்ந்தது குமாரசாமி அரசு! ஆட்சியை அமைக்கிறது பாஜக!
Karnataka Governor accepts Kumaraswamy resignation letter
குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததையடுத்து ஆளுநரிடம் ஆட்சியமைக்க எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உரிமை கோரவுள்ளார். குமாரசாமி அரசு கவிழ்ந்ததை அடுத்து விரைவில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு கர்நாடகாவில் உருவாகவுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பின்னர் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வியை தழுவியது.
இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சட்டபேரவையில் பலம் இழந்ததை தொடர்ந்து முதல் மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் குமாரசாமி.