சபரிமலை: அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பினராயி விஜயன்.
kerala chiefminister pinaraei vijayan
சபரிமலை விவகாரம் தொடர்பாக அமித்ஷாவின் பேச்சு இந்திய அரசியலமைப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் மற்றும் நீதித்துறைக்கு எதிராக உள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆளும் பாஜக அரசு ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ளது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கேரள சிவகிரி நாராயண குரு மடத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஐயப்ப பக்தர்களுக்கும் கேரள அரசிற்கும் இடையே மிகப்பெரிய போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
மேலும் நம் நாட்டுக் கோயில்களில் விதவிதமான பழக்கவழக்கங்கள் உள்ளன. பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதைப் போன்ற இயக்கங்களைச் சேர்ந்த 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலையின் புனிதத்தைக் காப்பாற்றுவதில் பாஜக பக்தர்கள் பக்கம் பாறைபோல் நிற்கிறது என்பதை கேரளாவின் இடதுசாரி அரசுக்கு ஓர் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றும் அவர் தெரிவித்தார்.
கேரளாவில் அவசர நிலை காலகட்டத்தில் நிலவும் சூழல் ஏற்பட்டிருக்கிறது எனவும் சாடினார். அமித் ஷாவின் விமர்னத்துக்கு பதிலளித்துள்ள கேளர முதல்வர் பினராயி விஜயன், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த முயற்சிக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாஜக தலைவர் மிரட்டும் வகையில் பேசியது கண்டனத்துக்கு உரியது. அமித் ஷாவின் பேச்சு உச்சநீதிமன்றம், அரசமைப்பு சட்டம் மற்றும் நீதித்துறையின் மீதான தாக்குதலாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.