திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழி.. ஓடஓடவிரட்டி துள்ளத்துடிக்க இளைஞனை போட்டுத்தள்ளிய நண்பர்கள்.!
திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்குப்பழி.. ஓடஓடவிரட்டி துள்ளத்துடிக்க இளைஞனை போட்டுத்தள்ளிய நண்பர்கள்.!
கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்ட நண்பனின் மறைவுக்கு பழிவாங்க நண்பர்கள் குற்றவாளியான இளைஞரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், அந்திவாடியை சார்ந்த திமுக பிரமுகர் உதயகுமார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவரின் கொலையில் தொடர்புடையவராக முரளி என்பவர் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், முரளியை கொலை செய்ய திட்டமிட்ட உதயகுமாரின் நண்பர்கள் மதன் குமார் மற்றும் நவீன் ஆகியோர் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி, சம்பவத்தன்று முரளியை மதுபானம் அருந்தலாம் என பெத்தக்கொள்ளு பகுதிக்கு அழைத்து சென்ற மதன் குமார் மற்றும் நவீன் ஆகியோர் சேர்ந்து, ஓடஓட விரட்டி முரளியை கொன்று பழிதீர்த்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஓசூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து மதன் குமார் மற்றும் நவீனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.