#Breaking: கிருஷ்ணகிரி ஜெகன் ஆணவக்கொலை விவகாரம்; தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்.. முழு விபரம் உள்ளே.!
#Breaking: கிருஷ்ணகிரி சங்கர் ஆணவக்கொலை விவகாரம்; தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம்.. முழு விபரம் உள்ளே.!
காவேரிப்பட்டினத்தில் நடந்த கொலை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 19ம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை, 3ம் நாளான இன்று பட்ஜெட் மீதான விவாதம், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெகன் என்ற இளைஞர் காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, நாளை அரசு சார்பில் பதில் அளிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெகனின் கொலை தொடர்பாக பேசிய முதல்வர், "கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைதாகியோரில் அதிமுக அவதானப்பட்டி நிர்வாகியும் இருக்கிறார். திமுக ஆட்சி புரியும் மண் சமூகநீதி காத்த மண். சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க ஒவ்வொரு உறுப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
மனிதநேயத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் காக்க நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம், திட்டம்பட்டி ஜெகன் (வயது 28), மார்ச் 21ம் தேதி 01.30 மணியளவில் கே.ஆர்.டி அணை சாலையில் சென்றபோது, சங்கர் என்ற அதிமுக கிளை செயலாளர் உட்பட 3 பேரால் தாக்கப்பட்டதில் ஜெகன் உயிரிழந்தார்
இதுகுறித்து காவேரிப்பட்டினம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், கல்லூரியில் படித்து வந்த மாணவி சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பாதிக்கும் தொழிலாளி ஜெகன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த காதல் திருமணத்தில் விருப்பம் இல்லாத சங்கர் உட்பட அவரின் ஆதரவாளர்கள் கொலையை நடத்தியுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்" என பேசினார்.