வசந்தகுமார் புகைப்படத் திறப்பு விழாவிற்கு குஷ்பூவிற்கு அழைப்பு இல்லை.! குஷ்பூ என்ன கூறியுள்ளார் தெரியுமா?
kushboo talk about Vasantha Kumar Photo Opening Ceremony
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் கடந்த 28ஆம் தேதி காலமானார்.வசந்தகுமார் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கியமான நபர் என்பதால், அவருடைய புகைப்படம் திறக்கும் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.
இந்தப் புகைப்படங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அவரது ட்விட்டர் பதிவில், "உயர்வான செயல். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவில் யாருக்குமே இது பற்றிய தகவல் சொல்லப்படவில்லை. தமிழகத்தில் இருக்கும் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான்தான். ஆனால் நான் இந்தத் தகவலைச் பத்திரிகை மூலமாகத் தெரிந்து கொள்கிறேன். நாம் நம் வலிமையை அதிகரிக்க வேண்டும். நமது பாதுகாப்பற்ற மனநிலை, ஈகோ காரணமாக பலவீனமாக்கக் கூடாது. எப்போது அதைச் செய்வோம்?? என கேள்வியெழுப்பியுள்ளார்.