மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை மார்ச் மாதம் 13ம் தேதிக்கு பிறகு தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். தற்போது தேர்தல் தேதி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்த தகவலின் படி 2024 ஆம் வருட பொதுத் தேர்தல் நடைபெறும் தேதிகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலின் போது பதற்றம் உள்ள பகுதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.