தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மோடியை அடிச்சி கேவலப்படுத்துவேன் - காங்கிரஸ் மாநில தலைவர் பரபரப்பு பேச்சு.!

மோடியை அடிச்சி கேவலப்படுத்துவேன் - காங்கிரஸ் மாநில தலைவர் பரபரப்பு பேச்சு.!

Maharashtra State Congress Leader Nana Patole Abuse Speech about PM and Change Words Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான பாஜக தேவேந்திர பட்நாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே பந்தாரா மாவட்டத்தில் உள்ள கிராம மக்களிடம் பேசும் விடியோவை வெளியிட்டுள்ளார். 

வீடியோவில் நானா படோலே பேசுகையில், "என்னால் மோடியை அடிக்க முடியும். அவரை வார்த்தையால் கேவலப்படுத்துவேன். இதனால் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் வந்து சென்றார்" என்று ஆவேசத்துடன் பேசி இருந்தார். 

இந்த விஷயம் குறித்து தேவேந்திர பட்நாவிஸ் தெரிவிக்கையில், "பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றிருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி 20 நிமிடம் சாலையில் சிக்கித்தவித்தார். அங்கு காங்கிரஸ் முதல்வர் பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை. இங்கு மாநில காங்கிரஸ் தலைவர் மோடியை அடிப்பேன், கேவலப்படுத்துவேன் என பேசுகிறார். 

maharashtra

காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது?. கடந்த காலங்களில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு இந்தியர்களை ஒருங்கிணைந்த கட்சி, எவ்வுளவு கேவலமாக தரம் தாழ்ந்துள்ளது. நானா படோலே உடல் ரீதியாக வளர்ந்துள்ளாரே தவிர்த்து மன ரீதியாக வளரவில்லை" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நானா படோலே, "நான் பிரதமர் மோடியை குறிப்பிட்டு பேசவில்லை. எனது தொகுதியில் உள்ள உள்ளூர் ரௌடியான மோடி என்பவர் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். அவரை பற்றியே பேசினேன்" என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #congress #Maharashtra Politics #India #devendra fadnavis #Nana Patole
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story