தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அ.தி.மு.க ஆட்சியில் உங்களுக்கு வாய்ப்பளித்தோம்..!! துரைமுருகன் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி ருசிகர பதில்..!!

அ.தி.மு.க ஆட்சியில் உங்களுக்கு வாய்ப்பளித்தோம்..!! துரைமுருகன் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி ருசிகர பதில்..!!

Minister Duraimurugan has said that the DMK members have behaved civilly by asking the opposition members to speak. Advertisement

எதிர்கட்சி உறுப்பினர் பேசட்டும் என்று தி.மு.க உறுப்பினர்கள் நாகரீகமாக நடந்து கொண்டதாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க உறுப்பினர் தங்கமணி பேசினார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் அ.தி.மு.க உறுப்பினர் தங்கமணி பேசும்போது தி.மு.க உறுப்பினர்கள் ஒரு முறை கூட குறுக்கீடு செய்யவில்லை என்று கூறினார்.

மேலும், எதிர்கட்சி உறுப்பினர் பேசட்டும் என்று எங்கள் உறுப்பினர்கள் நாகரீகமாக நடந்து கொண்டனர். ஓவ்வொரு விவாதத்தின் போதும் எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் தங்கம் தென்னரசு கூட இன்று குறுக்கீடு செய்யவில்லை. அ.தி.மு.க  ஆட்சியில் ஒரு முறையாவது இப்படி நடந்தது உண்டா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியில் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு மணி நேரம் வரை பேச வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 10 நிமிடம் மட்டுமே பேசிய தங்கமணி 3 துறைகளுக்கும் சேர்த்து அழகாக பேசியுள்ளார் என்று கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Minister Duraimurugan #dmk #AIADMK #Edappadi Palaniswami #Legislature Assembly
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story