அமைச்சர் ஜெயக்குமார் உதவியாளர் உயிரிழப்பு -எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..!
Minister Jayakumar Helper Died In Cuddalore Road Accident
கடலூரில் நடைபெற்ற சாலை விபத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் கே.ஆர். லோகநாதன் அவரது மகன்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பஸ்சின் பின்புறம், கார் மோதிய விபத்தில், அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர், அவரது 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே பலியான துயர சம்பவத்தை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார்.
கரூரில் இருந்து சென்னை நோக்கி சாலையில், முன்னாள் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென இடதுபுறமாக திரும்பியுள்ளது. இண்டிகேட்டரை இயக்காமலும், சமிஞ்சை செய்யாமலும் அரசுப் பேருந்தை, ஓட்டுநர் திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது பின்புறம் அதிவேகமாக வந்த லோகநாதனின் கார், அரசுப் பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது.
இதில் லோகநாதன், அவரது மகன்கள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த லோகநாதனின் மனைவி ஷாலினி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.