வரம்பை மீறுகிறதா சர்க்கார்? அமைச்சர் பேட்டியால் அச்சத்தில் ரசிகர்கள்!
Minister katamboor raju strict warning to sarkar
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நேற்று படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.
இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சற்றுமுன் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘படத்தின் கதைக்கு தேவைப்படாத நிலையிலும் உள்நோக்கங்களுடன் ‘சர்கார்’ படத்தில் ஏராளமான அரசியல் காட்சிகள் இருக்கின்றன. இது குறித்து நேற்று முதல் எனக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. வளர்ந்து வரும் நடிகரான விஜய்க்கு இது தேவை இல்லாத வேலை.
அரசு மருத்துவமனை ஒன்றிற்கு விசிட் அடிக்கும் விஜய் தமிழக அரசின் அத்தனை துறைகளையும் குறிப்பாக மருத்துவ துறையை கிழித்துத் தொங்கவிடுகிறார். இதுபோன்ற காட்சிகள் அதிகம் இருப்பதால் சர்க்கார் படத்திற்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.