"களத்திற்கே வராத அதிமேதாவி" - நடிகர் விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி.!
களத்திற்கே வராத அதிமேதாவி - நடிகர் விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி.!
திமுகவுக்கு பிரச்சனை வரும் ஒவ்வொரு நேரத்திலும் தொண்டர்கள் விரைந்து செயல்படுவார்கள் என அமைச்சர் பேசினார்.
சென்னையில் உள்ள கொளத்தூரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கருணை இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
234 எங்களுக்கே
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, "அரசியலில் களத்திற்கே வராதவர்கள், தங்களை அதிமேதாவிகள் போல நினைத்து பேசி வருகின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகள் என்ற திமுகவின் கனவு வீணாகும் என பேசுகிறார்கள்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவை 2 நாட்கள் கூடுகிறது; சபாநாயகர் அப்பாவு.!
தொண்டர்களின் செயல்பாடு
எங்களின் நிலைப்பாடு என்பது 234 சட்டப்பேரவை தொகுதிகளையும் கைப்பற்றுவது ஆகும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்புபோல திமுகவினர் செயல்படுகிறார்கள். திமுகவுக்கு பிரச்சனை வரும் ஒவ்வொரு நேரத்திலும் தொண்டர்கள் விரைந்து செயல்படுவார்கள். முதல்வரை அரியணையில் ஏற்றும் வரை எங்களின் பயணம் ஓயாது" என பேசினார்.
இதையும் படிங்க: "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" - தனக்கு எதிரான தீர்ப்பு விவகாரத்தில் எச்.ராஜா பரபரப்பு பேட்டி.!