ராகுல் காந்தி தான் பிரதமர், ஜனாதிபதி, சி.பி.ஐ, மன்னர் என புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்!.
MK stalin talk about Rahul Gandhi
கருணாநிதியின் சிலை திறப்புக்கு பிறகு ஒய்எம்சிஏ மைத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி ஆகியோர் உரையாற்றினர்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு விழாவைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் பேசுகையில், பிரதமா் நரேந்திர மோடி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக நடந்துகொள்வதற்கு பதிலாக தன்னை ஒரு மன்னராக கருதி செயல்பட்டு வருகிறாா் என கூறினார்.
தன்னை ஒரு பிரதமராக மட்டும் கருதாமல் தானே ஜனாதிபதியாகவும், தானே சி.பி.ஐ. அமைப்பாகவும், தானே வருமான வரித்துறையாகவும் கருதி செயல்படடு வருகிறாா். இதனால் தான் எதிா்க்கட்சிகள் அனைவரும் ஒன்றினைந்து மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம்.
தற்போதைய மோடியின் ஆட்சி 15 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து சென்றுள்ளது. இதே போன்று மேலும் 5 ஆண்டு காலம் மோடி ஆட்சி செய்தால் இந்தியா மேலும் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என கூறினார்.