×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மோடியால் முடியும் என்றால் நிதிஷ்குமாராலும் முடியும்!.. 2024ல் நிதிஷ் ஜி பிரதமராக பதவியேற்பார்: தேஜஸ்வி உறுதி..!

மோடியால் முடியும் என்றால் நிதிஷ்குமாராலும் முடியும்!.. 2024ல் நிதிஷ் ஜி பிரதமராக பதயேற்பார்: தேஜஸ்வி உறுதி..!

Advertisement

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதன் காரணமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள்  ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக  8 வது முறையாக நிதிஷ்குமார் அன்றைய தினமே பதவியேற்று கொண்டார். அவருடன்  பீகார் மாநில துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.

இதற்கிடையே, நிதிஷ்குமார் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்து பேசிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார்  நிர்வாகத்தில் அதிக அனுபவம் கொண்டவர். சமூக அனுபவமும் அவருக்கு உண்டு. மாநிலங்களவையை தவிர்த்து, மற்ற அனைத்து அவைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடியால் பிரதமராக முடியுமென்றால் நிதிஷ்குமாரால் ஏன் முடியாது?. தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமார் மிகவும் அசௌகரியமாக இருப்பதை உணர முடிந்தது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு ஆளுமையை இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#pm modi #Nitish Kumar #Tejashwi Yadav #NDA #bjp
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story