இ.பி.எஸ் கடிதத்தை திரும்ப பெறவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை - ஓ.பி.எஸ் தரப்பு பகீர் எச்சரிக்கை.!
இ.பி.எஸ் கடிதத்தை திரும்ப பெறவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை - ஓ.பி.எஸ் தரப்பு பகீர் எச்சரிக்கை.!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா - டிடிவி தினகரன் கூட்டணியானது தனியாக பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உதயமானது. ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைந்து ஆட்சியை தக்கவைத்தனர்.
இந்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் சிறுசிறு உட்கட்சி பூசலாக இருந்து வந்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஒருகட்டத்தில் பிரிந்து எதிரெதிர் முனையில் நின்று அரசியலில் பயணிக்கின்றனர். அதிமுக கட்சியை தனது கட்டுப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி வைத்துக்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், அதிமுக யாரிடம் இருக்கிறது என இவர்கள் தரப்பு அடித்துக்கொண்டு வந்தாலும், அரசு பதிவேடுகளில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு செயல்பாடுகள் ஆதரிக்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரேநாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய சட்ட ஆணையம் மேற்கூறிய கடிதத்தை அனுப்பி வைத்ததைத்தொடர்ந்து, அவை செய்தியாக வெளியாகி ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியே கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அமைச்சகம் கடித்ததை திரும்ப பெறவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என கூறி இருக்கிறார். இது மறைமுக எச்சரிக்கை என அரிசியால் மட்டத்தில் பேசப்படுகிறது.