சற்றும் எதிர்பாராத நிலையில் முதல்வர் பழனிச்சாமி சகோதரர் எடுத்த அதிரடி முடிவு ! அதிர்ச்சியில் அதிமுக கட்சியினர்!
palanisamy brother join with DMK
தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு எம்எல்ஏ மற்றும் அமைச்சராக மட்டும் பதவிகளை வகித்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் முதல்வர் பதவி ஏற்றார். அதனை தொடந்து தமிழநாட்டை ஆட்சி செய்ய துவங்கிய அவர் நாளடைவில் கட்சியையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
மேலும் முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன் விஸ்வநாதன். இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர். இவரும் அதிமுக காட்சியிலேயே இருந்துள்ளார். மேலும் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் விஸ்வநாதன் தனது சகோதரனும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சேலத்தில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இது கட்சியினருடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கட்சியில் தன்னை யாருமே மதிக்கவில்லை, மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் மனஸ்தாபம் ஆகியவற்றாலேயே விஸ்வநாதன் இவ்வாறு முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.