குத்துச்சண்டையிட்ட ரோஜா: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போட்டோக்கள்..!
குத்துச்சண்டையிட்ட ரோஜா: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் போட்டோக்கள்..!
பிரம்மாண்ட வெற்றி பெற்ற செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. இதன் பின்னர் தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார்.
இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை ரோஜா, படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆந்திர மாநில அரசியலில் ஈடுபட்டார். தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரவையில் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று விசாகப்பட்டினத்தில் குத்துச்சண்டை போட்டியை ரோஜா தொடங்கி வைத்தார். போட்டியை தொடங்கி வைத்த பின்பு ஆச்சரியம் அளிக்கும் வகையில் திடீரென கையில் கிளவுஸை மாட்டிய ரோஜா மைதானத்தில் இறங்கினார். குத்துச்சண்டை வீரர்களுடன் உற்சாகமாக சண்டையிட்ட ரோஜாவை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.