இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மனமுருகி வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மனமுருகி வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!
2024 மக்களவை தேர்தலில் 292 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மத்தியில் தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இன்று ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோருகிறார்.
மீண்டும் மோடி ஆட்சி
இன்று நாடாளுமன்றத்தில் உள்ள மைய வளாகத்தில் தேசிய ஜனநாயக கட்சியின் எம்.பிக்கள் மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனைதொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டு, அவர் தலைமையில் ஆட்சி நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 தொடக்கம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!
அரசியலமைப்பு சட்டத்திற்கு மரியாதை
இந்நிலையில், கூட்டம் நடைபெறும் நாடாளுமன்றத்தின் மைய வளாகத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, கூட்டணிக்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். அனைவரையும் வணங்கியபடி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வணங்கிய பின்னரே மேடைக்கு சென்றார்.